இந்திய டெஸ்ட் அணியில் ப்ரிதிவி ஷா இடம் பெற காரணம் இவர்தானா.?

dravid

இந்திய அணியின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மும்பையை சேர்ந்த ப்ரிதிவி ஷா மற்றும் காக்கிநாடாவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

prithivi

தொடக்க ஆட்டக்காரரான ப்ரிதிவி ஷா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க காரணம் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். மாயங்க் அகர்வால் மற்றும் ப்ரிதிவி ஷா ஆகிய இருவரும் தான் தொடக்க வீரருக்கான போட்டியில் இருந்தனர் . இதில், டிராவிட் அவர்கள் ப்ரிதிவி ஷாவை தேர்ந்தெடுக்க ஆலோசனை கொடுத்துள்ளார்.

எனவே, ப்ரித்வி ஷா அணியில் இடம் பிடித்தார். இருப்பினும், ப்ரிதிவி ஷாவின் வயதின் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார். ப்ரிதிவின் ஆட்டத்திறனை வைத்தே இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும் அகார்கர் தெரிவித்துள்ளார். மாயங்க் அகர்வால் தற்போது சுப்ரீம் பார்மில் இருந்தும் ப்ரிதிவியை டிராவிட் பரிந்துரைத்துள்ளார்.

prithivi dra

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பையை ப்ரிதிவி ஷாவின் தலைமையில் ஆன இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. ப்ரிதிவியின் பேட்டிங் சச்சினையும் கவர்ந்துள்ளது. அதை சச்சினே தெரிவித்துள்ளார் மேலும் பேட்டிங்கில் எந்த ஒரு மாற்றத்தினையும் செய்யாதே என்று ப்ரிதிவிக்கு அட்வைஸ் சொல்லி உள்ளார் சச்சின்.