முதல் ஒருநாள் போட்டி : சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் இதுதான் – வெளியான தகவல்

Samson
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிரம்மதேசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தஷன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை காண அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IND

- Advertisement -

இந்த போட்டியின்போது இந்திய அணி சார்பாக இரண்டு வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இன்று தங்களது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்கள். இந்த போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு சஞ்சு சாம்சன் இன்று விளையாடாதது அனைவருக்கும் பெரும் ஆச்சரியமாக அமைந்தது.

மேலும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவருக்கு என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்ப துவங்கினர். இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்த ஒருநாள் போட்டியில் விளையாடாததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான அறிக்கையில் சஞ்சு சாம்சனுக்கு முழங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என்றும் நிச்சயம் அவர் காயம் சரியான பின்பு இந்திய அணிக்காக விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷன் அறிமுகப் போட்டியில் விளையாடி உள்ளார். இதே தொடரில் நிச்சயம் சஞ்சு சாம்சனும் தனது முதலாவது அறிமுக ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement