ரோஹித் சர்மாவின் ஜெர்சி நம்பரான 45 என்கிற எண்ணுக்கு பின்னால் உள்ள சுவாரசியம் – அதை செலக்ட் பண்ணது யார் தெரியுமா ?

Rohith

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகமாகி கிட்டத்தட்ட 14 வருடங்களாக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா அதன்பின்னர் துவக்க வீரராக களமிறங்கி வெளிப்படுத்திய அதிரடியை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இதுவரை 227 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9205 ரன்களையும், 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2615 ரன்களையும், 111 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2864 ரன்களை குவித்துள்ளார்.

Rohith

அது தவிர மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் செஞ்சுரி அடித்த வீரர் என்ற சாதனையும் வைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த வீரர், 20 ஓவர்கள் போட்டிகளில் 4 சதம் என அவரது சாதனையை பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ரோகித் ஒரு அபாயகரமான வீரராக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது ஜெர்ஸி என் ஆன 45 என்கிற நம்பருக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சி நம்பருக்கு என்று ஒரு வரவேற்பு உள்ளது. குறிப்பாக தோனியின் 7 நம்பர், சச்சினின் 10 நம்பர் மற்றும் கோலியின் 18ஆம் நம்பர் ஜெர்ஸி என ஜெர்சி நம்பருக்கு என ரசிகர்கள் வரவேற்பு அதிகம்.

Rohith

அதேபோன்று ரோஹித் 45ஆவது நம்பர் ஜெர்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த ஜெர்ஸி நம்பருக்கு பின்னால் உள்ள சுவாரசியமான காரணம் என்ன என்பது குறித்து வெளியான தகவலின்படி ரோகித் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : 45 என்ற நம்பரை நான் தேர்வு செய்யவில்லை எனது அம்மாதான் இந்த நம்பரை தேர்வு செய்தார்கள். மேலும் 45 நம்பர் எனக்கு லக்கி நம்பர் என்று கூறி என்னை அதனை எடுத்துக்கொள்ள சொன்னதால் நான் எந்த வித மறுப்பும் இன்றி அந்த நம்பரை தேர்வு செய்து விளையாடி வருகிறேன் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

ஜெர்சி நம்பரை தேர்வு செய்ய பல வீரர்களுக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கும் வேளையில் தன் தாய் சொல்லை தட்டாமல் அவரது விருப்பப்படியே 45வது நம்பரை எடுத்து அணிந்து விளையாடி வரும் ரோகித் சர்மா படைத்த சாதனைகள் ஏராளம்.

Advertisement