புஜாராவிடம் இருந்து துணைக்கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோஹித்திடம் ஒப்படைக்க காரணம் இதுதான் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளுக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

indvsaus

இந்த இரு போட்டிகளுக்கான இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார், மேலும் அவர் அணியில் இடம் பெற்றது மட்டுமின்றி நேரடியாக துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஏற்கனவே இரண்டாவது போட்டியின்போது துணை கேப்டனாக இருந்த புஜாராவின் பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் தற்போது புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாக இருந்த கோலி முதல் போட்டியுடன் நாடு திரும்பியதால் மீதமிருந்த மூன்று போட்டிகளிலும் அவருக்கு அடுத்ததாக ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக இருந்த சீனியர் வீரரான ரஹானே கேப்டன்ஷிப்பை பெற்றார். மேலும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக ரஹானே டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பதவி வகித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Rahane

இதனால் இரண்டாவது போட்டியின்போது கேப்டனாக ரஹானே இந்திய அணியை திறம்பட வழிநடத்தி வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இந்த அணியில் மற்றொரு சீனியர் வீரரான புஜாரா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல் இரு போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்பதால் புஜாராவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது. இல்லையென்றால் ரஹானேவிற்கு அடுத்து ரோஹித் சர்மாவிற்கே நேரடியாக துணைக்கேப்டன் பதவி சென்றிருக்கும்.

- Advertisement -

Rohith

ஏனெனில் கோலிக்கு அடுத்து இந்திய அணியை அதிக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வெற்றிபெற்ற கேப்டனாக ரோஹித் திகழ்கிறார் எனவே அவருக்கு அணியை வழி நடத்திய அனுபவம் உள்ளது. மேலும் வீரர்களுக்கும் கேப்டனுக்கும் போட்டியின்போது அறிவுரை வழங்கும் யோசனையையும் அவரிடம் உள்ளது. இதன் காரணமாகவே தற்போது டெஸ்ட் தொடரிலும் ரோஹித்துக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதலிரண்டு போட்டிகளிலும் ரோகித் இல்லாததால் தான் சீனியர் வீரரான புஜாராவிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ரோகித் திரும்பி இருப்பதால் அந்த பதவியை ரோஹித்துக்கு கொடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.