சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட இதுதான் காரணம் – சுவாரசிய தகவல் இதோ

Jadeja
- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வந்த தல தோனியின் கேப்டன்சியில் இதுவரை சிஎஸ்கே அணியானது நான்கு முறை ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி அதிக முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய அணிகளின் வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணிக்கு கூடுதல் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கு காரணம் யாதெனில் ஒரே ஒரு கேப்டன் அதுவும் நம்ம தல தோனி என்பது மட்டும் தான். அந்த அளவிற்கு தனி ஒரு நபராக அணியை வழிநடத்தி இதுவரை கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக சென்னை அணியை உச்சத்தில் வைத்திருந்தார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனி இன்று திடீரென தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். ஒருபுறம் தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது வருத்தத்தை அளித்தாலும் மற்றொருபுறம் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ஜடேஜா சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாற என்ன காரணம் என்பது குறித்த சில தகவல்களை நாங்கள் இங்கே உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா தோனியின் தலைமையின் கீழ் மிகப்பெரிய வீரராக உருவெடுத்தது மட்டுமின்றி சென்னை அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

MS Dhoni Jadeja

குறிப்பாக பந்து வீசாத போது பேட்டிங்கிலும், பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத போது பந்துவீச்சிலும் அசத்தும் அவர் பீல்டிங்கிலும் கில்லி. இப்படி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 துறைகளிலும் மிக சிறப்பாக விளங்குகிறார். மேலும் இந்திய அணியிலும் கடந்த சில ஆண்டுகளாக அவரது பேட்டிங் பார்ம் உச்சத்தைத் தொட்டு இருக்கும் வேளையில் தற்போது அவர் நல்ல முதிர்ச்சி அடைந்த வீரராக மாறியதும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் ஆண்டுதோறும் சென்னை அணி குறிப்பிட்ட வீரர்களை தக்க வைக்கும் போது முக்கியமாக தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சென்னை அணி தக்கவைக்கும். அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி கழட்டிவிட்டு இருந்தாலும் ஜடேஜா இதுவரை முக்கிய வீரராக இருந்து வருகிறார். இப்படி தவிர்க்க முடியாத இடத்தில் அவர் இருப்பதும் அவர் கேப்டனாக மாற ஒரு காரணம் என்று கூறலாம்.

இதையும் படிங்க : அவர் பிறப்பிலேயே கேப்டன், அடுத்த 10 வருடத்துக்கு ராஜாங்கம் நடத்துவார் – இளம் இந்திய வீரருக்கு கிடைத்த பாராட்டு

அதே போன்று தோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி நீண்ட நெடிய காலம் அவருடன் நெருங்கிப் பழகிய ஜடேஜா அவருடைய தலைமைப் பண்புகளை அருகிலிருந்து உற்று கவனித்தவர். அதுவும் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க ஒரு வாய்ப்பாக அமைந்து இருக்கலாம் என்றும் கூறலாம்.

Advertisement