புஜராவோட வீக்னஸ் இதுதான். இனிமே அவர் வேலைக்காக மாட்டார் – புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்

Pujara-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் புஜாராவின் அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இரண்டாவது போட்டியில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியிலும் 23 பந்துகளை சந்தித்த புஜாரா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஏற்கனவே 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 33 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பொறுமையாக விளையாடி வருவதால் எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கும் வேளையில் அவர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் புஜாரா கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் வீண் செய்கிறார். அவர் இனி அணிக்கு தேவையில்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புஜாராவின் வீக்னஸை பகிர்ந்துள்ளனர். அதன்படி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு புஜாரா வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஸ்டம்பில் வரும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வருகிறார்.

pujara 2

மேலும் அந்த லைனில் துல்லியமான வேகத்தில் பந்து வந்தால் புஜாரா ஆட்டமிழக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச் சிறப்பான பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் பந்துகளை பேட்டில் மிடில் செய்வதில் வல்லவர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் அவுட் ஆகும் விதம் எல்லாம் எட்ஜாகி கேட்ச் ஆவதுதான்.

pujara 1

பந்து ஸ்டம்ப் லைனை தாண்டி வரும்போது பேட்டை விட்டு ஆட்டம் இழக்கிறார். 33 வயதான அவர் இனிமேல் அவர்கள் ஆட்டத்தை பெரிதாக மாற்ற முடியாது என்பதால் அவருக்கான மாற்று வீரரை தேடவேண்டிய அவசியம் உள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement