உங்க பவுலிங் சரியில்லை. நீங்க போய் ரஞ்சி போட்டியில விளையாடுங்க. முன்னணி வீரரை வீட்டுக்கு அனுப்பிய – பி.சி.சி.ஐ

Pandya-1
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

ind vs nz 1

- Advertisement -

இந்த தொடருக்கான டி20 இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் காயத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா இடம்பெறவில்லை. மேலும் அவர் யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அணியில் இடம்பிடிக்கவில்லை என்ற தவறான தகவலும் வெளியாகியது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து பாண்டியாவின் பயிற்சியாளர் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அது குறித்து அவர் கூறியதாவது : ஹார்டிக் பாண்டியா தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக முன்னர் அறிவித்தார் ஆனால் அவர் இந்திய அணி நிர்வாகத்தால் நடத்தப்பட்ட யோ-யோ டெஸ்டில் தேர்ச்சிபெறவில்லை என்ற தவறான தகவல் பரவியது. ஆனால் உண்மையில் நிர்வாகத்தால் நடைபெற்ற பந்துவீச்சு தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

Pandya

சர்வதேச போட்டிகளில் ஆடும் போது ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் அளவிற்கு அவருடைய பந்துவீச்சு இல்லை என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. மேலும் அதற்கு முன்பாக பரோடா அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ அவரிடம் அறிவுறுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Pandya-1

ஏற்கனவே முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹார்டிக் பண்டியா சிகிச்சைக்கு பின்னர் கடினமான பயிற்சி மூலம் தான் முழு உடல் தகுதி பெற்று விட்டதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement