இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் படிக்கல்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் – விவரம் இதோ

Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்.ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இதற்கு முன்னர் தற்போது நடைபெற்று முடிந்த பயிற்சிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களான ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக தற்போது அவர்கள் நாடு திரும்ப உள்ளனர். ஏற்கனவே இந்த தொடரில் பங்கேற்றிருந்த துவக்க வீரர் சுப்மன் கில்லும் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

INDvsENG 1

- Advertisement -

இந்நிலையில் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வெளியேறுவதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து செல்ல உள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே உள்ளூர் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தேவ்தத் படிகல்லுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதில் யாதெனில் : தேவ்தத் படிக்கல் ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை.

அது மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளிலும் அவர் மிக குறைந்த அளவே அனுபவம் உள்ளவராக இருக்கிறார். அதே வேளையில் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் நிறைய பங்கேற்றுள்ளனர். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதால் தற்போது அவர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.

Padikkal

படிக்கல் இளம் வீரர் என்பதால் இன்னும் அனுபவம் அவருக்கு தேவைப்படுகிறது. எனவே இனி வருங்காலங்களில் அவர் இந்திய அணிக்காக நிச்சயம் தேர்வாவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இலங்கையில் உள்ள படிக்கல் நிச்சயம் இரண்டாவது அல்லது மூன்றாவது டி20 போட்டியின் போது துவக்க வீரராக ஒரு போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement