இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட என்ன காரணம்? – விவரம் இதோ

Kuldeep
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாக்பூர் மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியின் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

குல்தீப் யாதவ் நீக்கப்பட என்ன காரணம்? :

இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணியானது அடுத்ததாக இன்று நாக்பூர் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் கடந்த போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த விராட் கோலி மீண்டும் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேபோன்று மற்றொரு மாற்றமாக முன்னனி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடாததுக்கு என்ன காரணம்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸின் போது பேசிய ரோஹித் சர்மா அவரது நீக்கத்திற்கு தெளிவான காரணத்தை வழங்கி இருந்தார். அந்த வகையில் குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க : தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாக என்ன காரணம்? – விவரம் இதோ

வருண் சக்கரவர்த்தி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் அவரை சோதிக்கவே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குல்தீப் யாதவுக்கு சரியான ஓய்வு தேவை என்பதற்காகவே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement