குல்தீப்க்கு ஏன் ஆடும் லெவனில் வாய்ப்பு கெடைக்கலன்னு அவருக்கே தெரியும். பேச எதுவும் இல்ல – கோலி ஓபன் டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியது.

umesh kuldeep

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளில் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி தற்போது 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டி முடிந்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறாத காரணத்தை கூறிகையில் அவர் குறிப்பிட்டதாவது : எந்த ஒரு வீரரும் தனிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்வு செய்து சிறப்பான பங்களிப்பு அளிக்கின்றனர். அந்தவகையில் குல்தீப் யாதவ் விஷயத்திலும் அதே தான் நடக்கிறது.

Ashwin

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் ஜடேஜாவும் அஸ்வினும் தான் முதன்மையான ஸ்பின்னர்கள் அவர்களுக்கு பேட்டிங் நன்றாக தெரியும் எனவே அவர்கள் தான் இந்தியாவில் விளையாடும் போட்டிகளில் ஆடுவார்கள். இது குல்தீப்புக்க தெரிந்த விடயம்தான் எனவே அவர் ஏன் தேர்வாகவில்லை என்று அவருக்கே நன்றாக புரியும் இதைப்பற்றி தனியாக பேச எதுவும் இல்லை என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement