விராட் கோலி அடுத்தடுத்து பதவி விலக ரவி சாஸ்திரி தான் காரணம் – பி.சி.சி.ஐ அதிகாரி பகீர் பேட்டி

Shastri
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் டி20 வடிவத்திலான கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக இது மாறியது. அதனை தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணி போட்டிக்கு முன்பாக இந்த ஆண்டுடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அடுத்தடுத்து அதிர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.

Kohli

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி பதவி விலகியது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் உலா வருகின்றன. அந்த வகையில் தற்போது தற்போது கோலி பதவி விலக ரவிசாஸ்திரி கொடுத்த அறிவுரை தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான இந்த தகவலில் தகவலின்படி :

பிசிசிஐ நிர்வாகி ஒருவர் அளித்த பேட்டியில் : கோலி ராஜினாமா செய்ய ரவிசாஸ்திரி ஆறு மாதங்களுக்கு முன்பே வற்புறுத்தினார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் : கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரவிசாஸ்திரி கோலியிடம் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து நீங்கள் விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏனெனில் கோலியின் பேட்டிங் பார்ம் தொடர்ந்து மோசமான சரிவை சந்தித்து வந்ததால் கோலி பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதால் ரவிசாஸ்திரி இதேபோன்று கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

ஆனால் விராட் கோலி அப்போது அதனை பெரிதாக நினைக்கவில்லை மேலும் தான் இந்த சரிவில் இருந்து மீள முடியும் என்று நினைத்து அவர் தொடர்ந்து கேப்டன்சி செய்து வந்தார். ஆனால் தற்போது அவரே தனக்கு ஏற்பட்ட இந்த சரிவினை உணர்ந்து டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

தற்போது விராத் கோலியின் மீது உள்ள அழுத்தம் சற்று குறைந்துள்ளதால் இனிவரும் காலங்களில் நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என அந்த பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். ஏற்கனவே விராத் கோலி பதவி விலகியதை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில் அவரது இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement