நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா சேர்க்கப்படாதது ஏன்? – காரணம் இதோ

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அண்மையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான அறிவிப்பில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இந்த இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டிருந்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறாதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் தொடரில் பும்ரா இடம்பெறாதது ஏன்? :

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தும் அவரை இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தேர்வு செய்யாதது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி துவங்க இருக்கும் வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு கடந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரினை காயம் காரணமாக தவறவிட்ட கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இம்முறை மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தயில் உச்சத்தை தொட்டுள்ளது. இவ்வேளையில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாமல் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி இணைத்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடரில் ஏன் சேர்க்கப்படவில்லை? என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை பார்க்கையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் முக்கிய வீரராக பங்கேற்பார் என்பதனால் அவரது காயத்தின் தன்மை மற்றும் பணிச்சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த ஒருநாள் தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சும்மா அவர் டீம்ல எதுக்கு இருக்காரு? அதுக்கு பேசாம ருதுராஜை செலக்ட் பண்ணிருக்கலாம்.. பத்ரிநாத் அதிருப்தி

அதேபோன்று டி20 உலக கோப்பை தொடரின் போது அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதினாலே இந்த ஓய்வு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் விளையாடுவார் என்றும் நிர்வாகம் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement