இப்படி ஒரு சூழலிலும் பி.சி.சி.ஐ வெளிநாட்டில் ஐ.பி.எல் தொடரை நடத்த இதுவே காரணம் – வெளியான தகவல்

IPL-1
- Advertisement -

உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டும் ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திடவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை ஐபிஎல் துபாய் மைதானங்களில் நடக்கும் என்று அறிவித்துவிட்டார்.

ipl

- Advertisement -

ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை தொடரையே தள்ளிவைத்து விட்டார்கள் அப்படி என்ன இப்போது ஐபிஎல் தொடருக்கு அவசியம் வந்துவிட்டது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பின்னால் வேறு எந்த காரணமும் இல்லை பொருளாதார இழப்புகள் தான் காரணம்.

ஐபிஎல் தொடரை டிவியில் ஒளிபரப்பப ஸ்டார் நிறுவனம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ க்கு கிட்டத்தட்ட 3,300 கோடி ரூபாய் கொடுக்கிறது. 5 வருடத்திற்கு 16,000 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் இது காலி. இந்த மூறையில் 3300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.

Star-sports

மேலும் இந்த ஆண்டுக்கான முழுத்தொகையையும் ஏற்கனவே ஸ்டார் குழுமம் அளித்துவிட்டது. திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறவில்லை என்றால் அவர்களுக்கு பெரும் நிதியிழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி பிரதான ஸ்பான்சராக இருக்கும் விவோ நிறுவனம் 440 கோடி ரூபாயை இந்த வருடத்தில் கொடுத்திருக்கிறது.

Ipl cup

இதுமட்டுமல்லாமல் சின்ன சின்ன ஸ்பான்சர்கள் என்று மொத்தம் 170 கோடி ரூபாய் வருகிறது. இதனை அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று துடிக்கிறது பிசிசிஐ.

Advertisement