- Advertisement -
ஆசிய கோப்பை

வெறும் 1 போட்டியில் விளையாடியுள்ள ஹர்ஷித் ராணா ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடிக்க – காரணம் இதுதானாம்

எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அந்த அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதனால் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக யார் தேர்வு செய்யப்படுவார்கள்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹர்ஷித் ராணா ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடிக்க காரணம் என்ன? :

ஆனால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்த அணியில் அவர் தேர்வு செய்யப்படாமல் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடியுள்ள 23 வயதான ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருந்தார். இப்படி பெரிய அனுபவம் இல்லாத ஹர்ஷித் ராணா மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் தேர்வானது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி அனுபவ வீரர்கள் பலர் இருந்தும் இளம் வீரரான அவரை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கொண்டு வர காரணமே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் தான் என்கிற தகவல் மறைமுகமாக தென்படுகிறது. அவர்தான் ஹர்ஷித் ராணாவை ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கொண்டு வந்துள்ளார் என்றும் தெரிகிறது.

ஏனெனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் டெல்லி மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். எனவே டெல்லியில் விளையாடி வரும் வீரர்கள் மீதான கவனம் அவருக்கு அதிகளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மாநில அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் ஹர்ஷித் ராணாவின் மீது இவரது பார்வை அதிகளவில் இருந்தது.

- Advertisement -

அதோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா அணியின் மென்டராகவும் கம்பீர் செயல்பட்டிருந்த வேளையில் அந்த அணியிலும் ஹர்ஷித் ராணா இடம் பிடித்திருந்தார். அப்போது ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து பணியாற்றிய கௌதம் கம்பீர் அவரை அருகில் இருந்து பார்த்துள்ளார். இப்படி ஹர்ஷித் ராணாவை கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கமாக கம்பீர் பார்த்து வருவதால் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாதது ஏன்? முகமது ஷமி கொடுத்த விளக்கம் – விவரம் இதோ

அதன் காரணமாகவே இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவரை இணைத்துள்ளார் என்று தெரிகிறது. ஏற்கனவே கம்பீர் ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அவரை அணிக்குள் கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்வார் என்று கூறப்படும் வேளையில் அந்த வகையிலேயே ஹர்ஷித் ராணாவையும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -