முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு ப்ரித்வி ஷா மட்டும் காரணமா ? அவரை டார்கெட் செய்வது சரியா ? – ஓர் அலசல்

Shaw-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்த முதல் டெஸ்டில் தோல்விக்கு முதன்மை காரணமாக பலரும் முன்வைக்கும் ஒரு கருத்து யாதெனில் இந்திய அணியின் துவக்க வீரர் ஆன ப்ரித்வி ஷாவின் மோசமான பேட்டிங் தான். ஏனெனில் இவர் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், 2வது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே அடித்ததால் இனி இவர் இந்திய அணிக்கு துவக்க வீரராக இருக்க முடியாது என்றும், இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Ind

- Advertisement -

இந்த கருத்தினை இந்திய அணியின் ஜாம்பவான் கவாஸ்கர் இலிருந்து கடைக்கோடி ரசிகன் வரை அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால் இவரை மட்டும் அணியில் இருந்து நீக்க வேண்டுமா ? என்றால் அது தவறுதான். ஏனெனில் முதல் இனிங்ஸில் போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலியை ரன் அவுட் ஆக்கியவர் ரஹானே அதனால் அவர் மீது குற்றத்தை கூறமுடியுமா ?அதேபோன்று கோலி அவுட் ஆன பிறகு தான் ரஹானே பொறுப்புடன் ஆடி இருக்கவேண்டும் ஆனால் அவரும் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் யாரை குறை கூற முடியும் ? அதே போன்று முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடிய புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவருமே இரண்டாவது இன்னிங்சில் நிலைத்து நிற்கவில்லை.

துவக்க வீரர்கள் அனுபவமின்மை இல்லாதவர்கள் என்ற காரணத்தினால் ஆட்டம் இழந்தாலும் மூத்த வீரர்களான இவர்கள் மூவரும் இரண்டாவது இன்னிங்சில் சம நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களும் இந்த இரண்டாவது இன்னிங்சில் சொதப்பிவிட்டனர். அதனால் இந்த போட்டியில் தோற்றதற்கு எந்த பேட்ஸ்மேன்கள் மீதும் குறை கூறுவது தவறு. ஏனெனில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆனால் நமது அணியின் பீல்டர்கள் ஏகப்பட்ட கேட்சிகளை தவறிவிட்டனர். அந்த தவறவிடப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் சரியாக பயன்படுத்தி இருந்தால் ஆஸ்திரேலிய அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி இருக்க முடியும்.

Shaw

அப்படி சுருட்டி இருந்தால் இந்திய அணிக்கு அப்போது 100 ரன்கள் முன்னிலை கிடைத்திருக்கும். அப்படி 100 ரன்கள் முன்னிலை கிடைக்கும்போது அது தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கும். மொத்தமாக 150 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக வைத்து இருந்தால் கூட இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகியிருக்கும். இப்படி பீல்டிங்கில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமே தவிர பேட்ஸ்மேன்களை அணியில் இருந்து நீக்குவது என்பது முற்றிலும் தவறான விடயம் என்று சிலர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ப்ரித்வி ஷா தற்போது இளம் வீரராக அறிமுகமாகி 5 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அவரை இந்த ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் நீக்கினால் அவரது நம்பிக்கை முழுவதும் சிதைந்து விடும். அதனால் அவர் இனிவரும் போட்டிகளிலும் ஒரு நிலையில்லா தன்மையுடன், பாதுகாப்பற்ற உணர்வு உடனே விளையாடுவார். அதேபோன்று சஹாவின் ஆட்டமும் சர்ச்சையாகி உள்ளது. இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முதன்மை விக்கெட் கீப்பரான அவரை இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் நீக்கி விடக்கூடாது.

saha 2

எப்போதும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்க்கு முதல் தேர்வு என்று சஹாவை கூறிவிட்டு அவரை உடனடியாக நீக்குவது கேள்விக்குறியாகும். எனவே முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு ப்ரித்வி ஷா மற்றும் சஹாவை பலிகடாவாக ஆக்கி இந்தப் பழியிலிருந்து இந்திய அணி தப்பிவிட முடியாது. மொத்தமாக ஆட்டத்தில் முன்னேற்றம் காண அனைவரும் தங்களது பங்களிப்பை கொடுத்தாக வேண்டும் என்பதே நமது கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement