நேற்றைய போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் – இதனை கவனித்தீர்களா ?

Morgan
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் வரும் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.

indvseng

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்து சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 124 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 15 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கான விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜாய் பெஞ்சமின் என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளார் 60 வயதான அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் நேற்று அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

archer

பெஞ்சமின் இங்கிலாந்து அணிக்காக 25 முதல் தரப் போட்டிகள் மட்டுமின்றி மேலும் பல போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒட்டுமொத்தமாக 387 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கடைசியாக 1994ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

benjamin

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி நாளை அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement