ஷிவம் துபேவை 3 ஆம் இடத்தில் இறக்கியதற்கான காரணம் இதுதான் – கோலி பேட்டி

Dube-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 54 ரன்கள் குவித்தார்.

Dube 1

அதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் துவக்க வீரர்களான ராகுல் ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக கோலி வழக்கம்போல் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே மூன்றாவது வீரராக களமிறங்கினார். இது ரசிகர்களிடையே சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அவரின் இந்த மாற்றம் குறித்து போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட்கோலி தெரிவிக்கையில் : இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று டாஸ் போடும்போது கணித்தேன்.

dube

அதனால் எனக்கு பதிலாக துபேவை முன்கூட்டியே இறக்கி சுழற்பந்து வீச்சை அதிரடியாக எதிர்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி முதல் விக்கெட் விழுந்ததும் அவரை இறக்கினோம் அதேபோன்று அவரும் சிறப்பாக விளையாடினார் என்று கோலி கூறினார். நேற்றைய ஆட்டத்தில் இதுவரை பின்வரிசையில் இறங்கி அவரது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவித்த அவர் நேற்றைய போட்டியில் அவரது பேட்டிங் திறனை காண்பித்தார் என்றே கூறலாம்.

- Advertisement -

Dube

நேற்றைய போட்டியில் 3 ஆவது இடத்தில் இறங்கிய துபே 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அதிரடி மூலமே நேற்று இந்திய அணி சற்று நல்ல ஸ்கோரை எட்டியது.