தோனியின் இந்த திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா ? – தோனியின் நண்பர் பகிர்ந்த தகவல்

Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி நேற்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடாத தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடுவார் என்பதே இப்பொழுது ஒரு ஆறுதலான விஷயமாக மாறியுள்ளது.

Dhoni

இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆடிய தோனி அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடவில்லை. மேலும் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என்று பலரும் பேச்சுகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் தோனி எதற்கும் இடம் கொடுக்காமல் ஐபிஎல் தொடர் வரை பொறுத்திருந்தார் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பதற்கு முன்னால் தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். ஆனால் தோனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் பொருட்டு அவரது திறனின் அடிப்படையில் மீண்டும் அணியில் இடம்பிடிப்பார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

Dhoni-kohli

தோனிக்கு இந்தாண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுவதாக மாற்றி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் தள்ளிப்போனதாலே அவர் ஓய்வை அறிவித்து இருக்கிறார் என்பது போல பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழுக்கு பேட்டி அளித்த தோனியின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில் : அவருடைய உடல்நிலை முன்புபோல ஒத்துழைக்கவில்லை. மேலும் தோனி டி20 கிரிக்கெட் தொடரில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று நினைத்தார்.

dhoni with pant

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் ஓய்வு அறிவித்து விட்டார் இருப்பினும் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.