தோனி சரியாக இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவிக்க இதுவே காரணம் – அதன் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்

Dhoni Dhawan
- Advertisement -

தோனி எப்போதும் போல தனது பாணியில் திடீரென ஓய்வினை அறிவித்துவிட்டார். இப்படித்தான் 2014 ஆம் ஆண்டின் யாரும் எதிர்பார்க்காத வேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார் .தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வேளையில், தனது பாணியில், தனது வேலைகளை செய்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் தோனி.

Dhoni

- Advertisement -

கிரிக்கெட் களத்திலும் அப்படித்தான். நாம் ஒண்று நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு விஷயத்தை செய்வார். அது அவருக்கு வெற்றியையும் தேடித் தரும். இப்படித்தான் பல விஷயங்களை செய்வார் தோனி. இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

ஆனால் இனிமேல் ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பதை வேறொரு விஷயத்திற்காகவும் நினைவுகூரப்படும். எளிமையாக யாரும் எதிர்பார்க்காத வேளையில் திடீரென தோணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.

Dhoni

‘’நன்றிகள், உங்களுக்கு நன்றிகள், இத்தனை வருடங்கள் எனக்கு கொடுத்த உங்கள் அன்பிற்கு நன்றிகள். இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்று விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வை எளிமையாக அறிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஏன் 7.29 மணிக்கே தனது ஓய்வை அறிவித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து அணிக்கெதிராக செமி பைனல், போட்டியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது தோனி 7.21 மணிக்கு ரன் அவுட் ஆனார்.

Dhoni

அதன் பின்னர் இந்தியா கடைசியாக 7.29 மணிக்கு தோல்வி அடைந்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாகத்தான் அந்த தருணத்தை நினைத்து தான் தோனி அந்த நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளார் தோனி.

Advertisement