மார்ச் 1 தோனி சென்னை வந்து பயிற்சி செய்யப்போகிறார். அதற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

dhonidecision

இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் மார்ச் 29ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி இந்த தொடருக்காக தற்போது சென்னையில் வந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

Dhoni 1

வழக்கமாக தோனி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் பயிற்சி செய்ய ஐபிஎல் தொடர் துவங்குமுன் ஒரு வாரத்திற்கு முன் தான் தோனி அணியில் வந்து பயிற்சியில் இணைவார். ஆனால் இம்முறை 28 நாட்கள் அவர் பயிற்சியில் இணைய இருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும் அதற்கு காரணமும் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதிகமான போட்டிகளில் விளையாடிக்கொண்டு இருப்பதால் அவர் ஒரு வாரத்திற்கு முன்பாகவே பயிற்சிக்கு வந்து இணைவார்.

Dhoni-Csk

ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் விளையாடி 8 மாதங்களுக்கு மேல் ஆவதால் அதிக அளவு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலேயே முன்கூட்டி சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை ரசிகர்கள் தோனியை காணும் ஆவலை எதிர்நூக்கி உள்ளனர்.

- Advertisement -
- Advertisement -