பும்ராவிற்கு துணைக்கேப்டன் பதவி மறுக்கப்பட்டதுக்கு காரணமே இதுதானாம் – வெளியான தகவல் இதோ

Bumrah
- Advertisement -

எதிர்வரும் சில நாட்களில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கவுள்ள வேளையில் தற்போதே இந்திய அணியானது சென்னை வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

துணைக்கேப்டன் பதவி பறிபோனது ஏன் ?

இந்த வங்கதேச டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் அந்த தொடருக்கான டெஸ்ட் துணை கேப்டன் யார்? என்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ அறிவிக்கவில்லை.

- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே துணை கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நீடித்து வந்தார். ஆனால் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான துணை கேப்டன் யார்? என்பதை தற்போது பிசிசிஐ அறிவிக்கவில்லை. இது அனைவரது மத்தியிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம் யாதெனில் : பும்ராவை பிசிசிஐ துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்புகிறது. அதற்காகத்தான் இந்த பொறுப்பு தராமல் இப்படி யார் பெயரையும் அறிவிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியான தகவலின் படி தெரியவந்ததாவது :

- Advertisement -

பும்ரா தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் முக்கிய வீரராக இருந்து வருவதால் அவருடைய பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு அவ்வப்போது ஓய்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பதவி பும்ராவிற்கு வழங்கப்பட்டால் அவர் அனைத்து போட்டியிலும் பங்கேற்று விளையாட வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி அவர் விளையாடும் போது காயம் ஏற்பட்டால் அது இந்திய அணிக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அந்த பையன் விளையாடுனா அது டீமுக்கு ரொம்ப நல்லது – தீப் தாஸ் குப்தா கருத்து

இதன் காரணமாகவே பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டே அவரது இந்த பதவி நீக்கம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முக்கிய தொடர்களில் பும்ரா அவசியம் என்பதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விருப்பப்பட்டால் விளையாடலாம் இல்லையென்றால் பென்ச்சில் அமரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement