- Advertisement -
இந்திய கிரிக்கெட்

போன மேட்ச்லயே பென் ஸ்டோக்ஸ் இந்த கஷ்டத்தை பாத்தாரு.. அதான் வெளில போயிட்டாரு – விலகலுக்கான காரணம்

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் நாளை விளையாட இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் விலகலுக்கான காரணம் :

அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசி போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஆலி போப் அந்த அணியை வழிநடத்த இருக்கிறார். இப்படி பென் ஸ்டோக்ஸ் இந்த ஐந்தாவது போட்டியில் இருந்து விலக காரணம் யாதெனில் : ஏற்கனவே இந்த தொடர் முழுவதுமே பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் நிறைய ஓவர்களை வீசிய பென் ஸ்டோக்ஸ் அதிகளவு பணிச்சுமையை எதிர்கொண்டார்.

- Advertisement -

அதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பந்து வீசுகையில் அடிக்கடி தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வலியால் அசவுகரியத்தை உணர்ந்தார். இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலுமே இடைவிடாமல் பந்துவீசி வந்த அவருக்கு தோள்பட்டையில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. அதனை அவர் நான்காவது போட்டியின் போதே உணர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : நீதான் நம்ம டீமுக்காக இந்த ரோலை பண்ணப்போற.. துருவ் ஜுரேலை ஊக்கப்படுத்திய கம்பீர் – விவரம் இதோ

எனவே இந்த காயம் மேலும் தீவிரமடையக்கூடாது என்பதற்காகவே அவர் கடைசி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் பங்கேற்க இருப்பதால் அந்த தொடரினை கருத்தில் கொண்டும் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

- Advertisement -