உ.கோ டி20 அணியில் அஷ்வினை தேர்வு செய்ததன் காரணம் இதுதான் – தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

Ashwin
- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. கடைசியாக அஷ்வின் இந்திய அணிக்காக 2017 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். அதன்பின்னர் சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்களின் வருகையால் தனது இடத்தை தவற விட்டார்.

ashwin

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய டி20 அணியில் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்த்தது ஏன் ? என்பது குறித்து தேர்வுக் குழு தலைவரான சேத்தன் சர்மா தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அஷ்வின் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். மேலும் அந்தத் தொடரில் அவரது சிறப்பான ஆட்டமும் வெளிப்படுத்துகிறது. உலக கோப்பை போன்ற ஒரு முக்கியமான தொடருக்கு நல்ல ஸ்பின்னர் தேவை. ஐக்கிய அரபு அமீரகத்தில் நல்ல ஸ்பின்னர்கள் அணிக்குள் இருப்பது அவசியம்.

Ashwin

அந்த வகையில் அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள். ஐபிஎல் தொடர்களில் அஷ்வின் சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் அவரை அணியில் இணைத்துள்ளோம்.

Ashwin 2

ஐபிஎல் தொடரை வைத்து அவரை எடுத்தோம் என்று நாங்கள் கூறக்காரணம் யாதெனில் ஐபிஎல் தொடரில் உலகின் திறமையான வீரர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகின்றனர். அப்படி வலுவான வீரர்களுக்கு எதிராக அஷ்வின் கொடுத்த சிறப்பான செயல்பாடே அவரைத் தேர்வு செய்ய வைத்தது என சேத்தன் சர்மா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement