முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வினை வெளியேற்றியதற்கான 3 காரணங்கள் இவைதான் – விவரம் இதோ

Ashwin-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் குவித்து இருந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் குவித்தது.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பின்னர் இந்திய அணியில் உள்ள மாற்றங்களை குறிப்பிட்ட கோலி அஷ்வின் விளையாடவில்லை என்பதை உறுதி செய்தார். இந்த விடயம் தற்போது இணையத்தில் அதிகம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்திய அணியின் சீனியர் வீரரும், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 413 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர்கள் சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்று பெருமையுடன் உள்ளார். அயல்நாட்டு மைதானங்களிலும் சிறப்பாக பந்துவீசிய இவரை அணியில் இருந்து நீக்கியது தவறு என்று பலரும் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

ashwin 2

இந்நிலையில் தற்போது அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட மூன்று முக்கிய காரணங்கள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் முதலாவது காரணம் : மைதானத்தில் உள்ள சூழ்நிலை மற்றும் தன்மை காரணமாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க வேண்டும் என்பதற்காக அஸ்வின் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இரண்டாவது காரணம் :

Jadeja

இலங்கை அணியில் 6 வலதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதனால் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கலாம் இதன் காரணமாக அணி நிர்வாகம் ஜடேஜாவை சேர்த்திருக்கலாம் எங்கு தெரிகிறது. மூன்றாவது காரணம் : அஷ்வினை விட ஜடேஜா சற்று சிறப்பாக செயல்படக் கூடியவர். இந்திய அணியின் பேட்டிங் வரிசை பின் வரிசையிலும் பலமாக இருக்கவேண்டும் என்பதை நினைத்து இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன ?

Advertisement