கோலி ஏன் பெங்களூரு அணியுடன் பயணிக்காமல். தனியாக துபாய் வந்தார் – அணி நிர்வாகம் அளித்த பதில்

Rcb
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தமுள்ள 60 போட்டிகளும் இங்கு உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் நடக்கிறது. இந்த மூன்று மைதானங்களும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை இதற்காக கடந்த ஒரு வாரமாக அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை வைத்து தங்களது சொந்த மைதானத்தில் பயிற்சியைச் செய்து வந்தனர்.

Dubai

- Advertisement -

பயிற்சியை தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் ஐபிஎல் அணிகள் அனைத்தும் துபாய்க்கு பயணத்தை தொடங்கின. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் பயிற்சியை முடித்து துபாய் சென்றனர்.

மேலும் வெளிநாட்டு வீரர்கள் பலரும் அந்தந்த நாடுகளில் இருந்து துபாய்க்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பெங்களூருவில் இருந்து பயணம் மேற்கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலியை தவிர்த்து மற்ற அனைவரும் துபாய்க்கு சென்றனர். இதனை ட்விட்டர் பக்கத்திலும் அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இதனால் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் கோலி ஏன் அணி வீரர்களுடன் செல்லவில்லை. இப்போது எங்கே இருக்கிறார் ? என்ற கேள்வி ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறியது. அதன் பின்னர் தற்போது இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில் : கோலி மும்பையில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதன் காரணமாக சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது.

மேலும் கோலி கொரோனோ வைரஸ் சோதனை மேற்கொண்ட முடிவும் சற்று தாமதமாக கிடைத்ததால் அவர் அங்கு தனியாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது அதன் காரணமாக வரமுடியவில்லை. அதன் பின்னர் தற்போது தனி விமானம் மூலம் அவர் துபாய் வந்து விட்டார் என்றும் கூறியுள்ளார் அந்த நிர்வாகி.

Advertisement