கோலியின் வருகையால் வாய்ப்பை இழந்த 5 இந்திய வீரர்கள் – பட்டியல் இதோ

Kohli-1
- Advertisement -

விராட் கோலியின் அபாரமான திறமையால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பல வீரர்கள் இருக்கின்றனர். எப்படி தோனியின் திறமை காரணமாக தினேஷ் கார்த்திக் மற்றும் பார்த்தீவ் பட்டேல் போன்றோர் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்தனரோ அதேபோன்று விராட் கோலியின் அதிசிறந்த பேட்டிங்கினால் பல இந்திய திறமை வாய்ந்த வீரர்கள் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போயுள்ளனர். தற்போது அப்படிப்பட்ட 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

முரளி விஜய் :

சேவாக், கௌதம் கம்பீர் அல்லது சச்சின் டெண்டுல்கர் ஆகியோரில் ஒருவர் ஓய்வு பெற்றால் இவர்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டியிருந்தது. 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு விட்டார் முரளிவிஜய். ஆனால் பெரிதாக ஒருநாள் அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவந்தார். மேலும் வெளிநாடுகளில் நன்றாக ஆடும் வழக்கத்தை கொண்டிருந்தார் முரளிவிஜய். இந்த அனைத்தையும் சேர்த்து விராட்கோலி ஒற்றை ஆளாக சமாளித்தார் . விராட் தொடர்ச்சியாக நன்றாக ஆட முரளிவிஜய் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தார். தற்போது அந்த இடமும் அவருக்கு இல்லை

அமித் மிஸ்ரா :

- Advertisement -

இவர் விராட் கோலியின் பேட்டிங்கினால் பாதிக்கப்படவில்லை .ஆனால் அவரது கேப்டன்ஷிப்பால் பாதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து கொண்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டே இந்திய அணியில் இடம் பிடித்தவர். தொடர்ச்சியாக இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. விராட் கோலியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 18 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் கடைசியாக நடைபெற்ற டி20 போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் விராட் கோலி பெரிதாக விரும்பியது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , குல்திப் யாதவ் ஆகியோரை மட்டுமே. இதன்காரணமாக திறமை இருந்தும் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு இருக்கிறார் அமித் மிஸ்ரா.

- Advertisement -

கருண் நாயர் :

இவரும் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பால் பாதிக்கப்பட்டவர்தான். உண்மையை சொல்லப்போனால் விராட் கோலிக்கு இவரைப் பிடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார் கருண் நாயர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய அந்த போட்டியில் இவர் முச்சதம் விளாசினார். கிட்டதட்ட 15 வருடங்கள் கழித்து சேவாக்கிற்கு பிறகு சதம் விளாசிய ஒரே வீரர் இவர்தான். ஆனால் அடுத்த போட்டியிலேயே அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் கருண் நாயர்.

- Advertisement -

இதற்கு காரணம் பெரிதாக தெரியவில்லை. தற்போது வரை இந்திய அணியில் இவர் இடமும் பிடிக்கவில்லை . அந்த முச்சதத்திற்கு பிறகு ஒருமுறை கூட இவருக்கு விராட் கோலி வாய்ப்பளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tiwary

மனோஜ் திவாரி :

இவரது கிரிக்கெட் வாழ்க்கை காலியானதற்கு விராட் கோலியின் மீது மட்டும் பழியைப் போட முடியாது. தோனியும் இதற்கு காரணம். கடைசியாக இவர் 2012ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது சதமடித்து ஆட்ட நாயகன் விருது பெற்று இருந்தார். அப்போது கேப்டனாக இருந்தது தோனிதான்
ஆனால் அதற்குப் பின்னர் இவரை களம் இறக்கவே இல்லை. விராட் கோலி நினைத்திருந்தால் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் அவரும் கைகொடுக்கவில்லை. முதல்தர போட்டிகளில் 60 சராசரி வைத்திருக்கும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர்.

சுப்ரமணியம் பத்ரிநாத் :

விராட் கோலியின் திறமையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் இவர்தான். 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு வீரர்கள் அறிமுகமானார்கள். ஒன்று விராட் கோலி மற்றொன்று பத்ரிநாத். இந்த போட்டியில் விராட் கோலி பெரிதாக ரன் அடிக்கவில்லை. ஆனால் பத்ரிநாத் போராடி 27 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். அதற்கு பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கினார். அப்போதிருந்த ஆக்ரோசமான தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்த்து 58 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக விராட் கோலியை தேர்வு செய்வதா, இல்லை பதிரிநாத்தை தேர்வு செய்வதா என்று தேர்வுக்குழுவினர் விழிபிதுங்கி கொண்டிருந்தனர் . அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த சந்தீப் படில் விராட் கோலியை தேர்வு செய்ய வலியுறுத்தினார். ஏனெனில் விராட் கோலி இளம் வீரர், அவர் நன்றாக ஆடி விட்டால் இந்திய அணிக்கு அடுத்த பதினைந்து வருடங்களுக்கு நல்ல வீரர் ஒருவர் கிடைப்பார். அப்போதே பத்ரிநாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது.

Advertisement