தல தோனியுடன் அறிமுகமாகி அவருக்கு முன்னர் ஓய்வுபெற்ற முன்னணி வீரர்கள் – பட்டியல் இதோ

Dhoni

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமானார். அறிமுகமாகி இரண்டு வருடத்திலேயே கேப்டன் பொறுப்பையும் பெற்றார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை ,2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை ,2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் உச்சங்களை கைப்பற்றினர். ஆனால் இவரது காலத்தில் தோனி பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. தோனியின் காலத்தில் அறிமுகமாகி அவருக்கு முன்னதாகவே ஓய்வு பெற்ற பல வீரர்கள் இருக்கின்றனர். அவர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Dhoni

பிரக்யான் ஓஜா : இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்கு அடுத்த ஐந்து வருடங்கள் விளையாடினார். அதன் பின்னர் அடுத்த சிலவருடங்கள் முதல் தரப் போட்டிகளில் ஆடிவிட்டு 2018 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். கடைசியாக இவர் 2012ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடினார் என்பது. குறிப்பிடத்தக்கது இவர் தோனிக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டார்.

முனாஃப் படேல் : இவர் 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரால் 5 ஆண்டுகள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட முடிந்தது . 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். 70 ஒருநாள் போட்டிகளிலும் 13 டெஸ்ட் போட்டிகளிலும் 3 டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக ஆடி உள்ளார். 2018 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

Munaf

பிரவீன் குமார் : இந்திய அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இவர். அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அடுத்த மூன்று வருடங்கள் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களான ரிக்கி பாண்டிங் கெவின், பீட்டர்சன் என பலர் அவரது பந்து வீச்சில் திணறி உள்ளனர். இவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக இந்திய அணியில் இருந்து தனது இடத்தை இழந்தார். 6 டெஸ்ட் .68 ஒருநாள் 10 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

- Advertisement -

ஆர் பி சிங் : இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை. 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கிய பந்துவீச்சாளர்கள் இருந்தார். 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆடிய இவர் 2018 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகள் 58 ஒருநாள் போட்டிகள் மற்றும்1 0 டி20 போட்டிகளில் ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

RP singh

மன்பிரீத் கோனி : இந்திய அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் கோனி. அதன் பின்னர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடினார் .மேலும் 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி அதன் பின்னர் தனது ஓய்வை அறிவித்தார்.