வார்னே சாதனைகளும், போதைபொருள், கள்ள உறவு, விவாகரத்து சர்ச்சைகளும் – முழு வாழ்க்கை பயணம் இதோ

Warne
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தனது 52வது வயதில் நேற்று திடீரென மாரடைப்பால் இயற்கை எய்தினார். கடந்த 1992 முதல் 2007 வரை சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனையோ உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தனது மேஜிக் நிறைந்த சுழல் பந்து வீச்சால் திணறடித்த அவரின் இந்த மறைவு ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

IND

- Advertisement -

தனது அபார திறமையால் சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்காத மைதானங்களில் கூட மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளிய அவர் ஆஸ்திரேலியாவின் பல சரித்திர வெற்றிகளில் மிக மிக முக்கிய பங்காற்றியுள்ளார். சொல்லப்போனால் 1001 விக்கெட்டுகளுடன் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த லெக் ஸ்பின் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ள அவர் இன்று பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவரின் இந்த மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட உலகின் பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

சாதனைகளும் சர்ச்சைகளும்:
டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்கள், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பந்துவீச்சாளராக ஷேன் வார்னே சாதனை படைத்துள்ளார். அதேபோல் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசி (பால் ஆப் தி செஞ்சூரி) 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என பல சாதனைகளையும் சரித்திரங்களையும் அவர் படைத்துள்ளார். அதேசமயம் அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்ததில்லை. அந்த வகையில் ஷேன் வார்னேவின் முழு வாழ்க்கை பயணத்தை பற்றி பார்ப்போம்.

1. ஷேன் கேத் வார்னே எனப்படும் அவர் கடந்த 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி எனும் இடத்தில் பிறந்தார்.

- Advertisement -

2. பள்ளி வயதில் கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தவர் கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார். இதில் வியக்க வைக்கும் செய்தி என்னவெனில் அவர் வீசிய முதல் பந்தை அப்போதைய இளம் இந்திய வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் எதிர்கொண்டார். அந்த போட்டியில் 150 ரன்களை வழங்கி சுமாராக பந்துவீசிய அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.

Warne-3

3. ஆனால் அதற்கெல்லாம் அசராத அவர் அடுத்த ஒரு வருடத்திலேயே தன்னை மெருகேற்றிக் கொண்டு 1993ஆம் ஆண்டு முதல் முறையாக வெளிநாட்டில் இங்கிலாந்துக்கு எதிராக பழைய ட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த ஆஷஸ் போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் கட்டிங்க்கு எதிராக அவர் வீசிய முதல் பந்தே அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணமாக பிட்ச் ஆனபின் தாறுமாறாக திரும்பி ஸ்டம்ப்பில் பட்டு விக்கெட்டை எடுத்துக் கொடுத்தது. நாளடைவில் அந்த பந்து தான் 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்து என அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

4. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர் கடந்த 1994 ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார்.

5. இப்படி உலக கிரிக்கெட்டில் முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்த அவர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் முறையாக மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஆஸ்திரேலிய அணியின் ரகசியத்தை இந்திய சூதாட்ட தரகரிடம் கூறியதற்காக ஷேன் வார்னே – மார்க் வாக் ஆகிய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

- Advertisement -

Warne 1

6. 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் அபாரமாக பந்துவீசிய ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

7. சர்ச்சை சிக்கினாலும் தொடர்ந்து சாதனைகளை படைத்து வந்த அவர் 20ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக 2000ஆம் ஆண்டு விஸ்டன் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ்,ஜேக் ஹோப்ஸ், சர் விவியன் ரிச்ர்ட்ஸ் ஆகியோரும் அந்த மாபெரும் பெருமையைப் பெற்றார்கள்.

warne

8. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதற்காக ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

9. ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த 2003 உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார்.

10. தனது 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்த மனைவி சிமோன் செல்ஹானை இதர பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக 2004இல் விவாகரத்து செய்தார்.

Warne-2

11. இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தவித்த அவர் கடந்த 2005ஆம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடி 96 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தார்.

12. கடந்த 2006இல் தனது சொந்த ஊரான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ரசிகர்களுக்கு முன்னிலையில் டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை தொட்ட முதல் பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்தார்.

13. 2007ஆம் ஆண்டு 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை எடுத்து உலகின் மகத்தான பந்துவீச்சாளராக ஓய்வு பெற்றார்.

Warne

14. மற்றொரு பெண் என நினைத்துக்கொண்டு தவறுதலாக தனது முன்னாள் மனைவி சிமோனுக்கு ஏடாகூடமான குறுஞ்செய்தி அனுப்பி 2007இல் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.

15. ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஷேன் வார்னே முதல் சீனிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார்.

15. லிஸ் ஹர்லி எனும் பிரிட்டிஷ் நடிகையுடன் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர் அதன்பின் அவருடன் நிச்சயம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்கள் 2013இல் பிரிந்தார்கள்.

warne

16. 2011ஆம் ஆண்டு ஒரு இந்திய முக்கிய கிரிக்கெட் நிர்வாகியிடம் பொது இடத்தில் தகாத வகையில் நடந்து கொண்டதற்காக அவருக்கு 50,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

17. 2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி விடைபெற்றார்.

18. ஐசிசி வழங்கும் மிகப்பெரிய உயரிய ஹால் ஆப் பேம் விருதை கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனில் பெற்றார்.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

19. ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த 2013இல் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

20. அதன்பின் சிறிது காலம் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பயிற்சியாளராக இருந்த அவர் பல தொலைக்காட்சிகளில் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும் செயல்பட்டார். தற்போது தாய்லாந்தில் தனது 52வது வயதில் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்தியுள்ளார்.

Advertisement