இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடிய 4 வீரர்கள் – முழு லிஸ்ட் இதோ

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற கிரிக்கெட் வாரியங்கள் போலல்ல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் 5 முதல் 8 வருடங்கள் வரை ஒரு வீரரை அதிகபட்சமாக தக்க வைத்திருக்கும். அதற்கு பின்னர் இளைஞர்களுக்கு வழி விடும், புதிய திறமையை தேர்ந்தெடுத்து நகர்ந்துவிடும். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அப்படி இல்லை ஒரு வீரர் நன்றாக ஆடி விட்டால் அவர் எத்தனை ஆண்டுகள் நன்றாக ஆடுகிறாரரோ அத்தனை ஆண்டுகள் அவரை தொடர்ந்து ஆட வைக்கும். அப்படி இந்திய அணிக்காக அதிக வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

சச்சின் டெண்டுல்கர் – 22 வருடங்கள் 91 நாட்கள் :

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் 1990 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் 91 நாட்கள் அவரது ஒருநாள் போட்டியின் காலம் நீடித்து இருந்தது.

harbhajansingh

ஹர்பஜன்சிங் – 19 வருடம் 96 நாட்கள் :

- Advertisement -

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். தனது 19 வயதில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார். 19 வருடங்கள் விளையாடினார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 269 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Kumble

அனில் கும்ப்ளே – 16 வருடங்கள் 328 நாட்கள்

- Advertisement -

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார். 1990 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார். 2007ம் ஆண்டு கடைசியாக விளையாடினார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி 337 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 610 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

YuvrajSingh

யுவராஜ் சிங் – 16 வருடங்கள் 270 நாட்கள் :

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் நாயகன் இவர். இவரும் ஹர்பஜன் சிங்கை போன்று இளம் வயதிலேயே அறிமுகம் ஆகி விட்டார். கிட்டத்தட்ட 16 வருடங்கள் விளையாடினார். 8701 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டும் அடித்துள்ளார் . கடந்த 2019ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இவர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement