ரபடாவிற்கும் ஸ்மித்திற்கும் நடந்த அனல் பரந்த மோதல்

smith
- Advertisement -

தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிஸோ ரபேடா ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஆவேசமாக அவர் செல்லும் பாதையில் வழிமறித்து ஸ்மித் ஷோல்டரை தன்னுடைய ஷோல்டரில் வேண்டுமென்ற உரசி சென்றது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே முகம்சுளிக்க வைத்துள்ளது.

cricket

- Advertisement -

ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியாவிற்கிடையேயான இந்த டெஸ்ட் தொடரில் இதுபோன்ற முரட்டுத்தனமான சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினமும் அதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று போட்டியின் நடுவரான ஜெப் குரோவ் கணித்திருந்த நிலையில் அதேபோன்று நேற்றைய தேநீர் இடைவெளிக்கு முன்னர் ககிஸோ ரபேடா வீசிய ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்.

rabada

ஸ்மித் ஆட்டமிழந்ததுமே எஸ் எஸ் என்று உரக்க கத்திக்கொண்டே ஸ்மித் செல்லும் திசையை நோக்கி வேண்டுமென்றே சென்று அவரது ஷோல்டரை பதம் பார்த்தார்.

இதுபோன்ற மோதல்கள் இந்த தொடரில் தொடர்ந்து நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Rabada faces nervous wait

Will Proteas star Kagiso Rabada find himself in trouble for this incident on day one?

Posted by cricket.com.au on Friday, March 9, 2018

Advertisement