தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்பாடு.! பாக்கிஸ்தான் வீரர் கிரிக்கெட் வாழ்கை கேள்விக்குறியில்..?

- Advertisement -

சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இலங்கை அணியின் சண்டிமல் பந்தை சேதப்படுத்தினர் என்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அஹ்மத் ஷேஷாத் தடை செய்யட்ட போதை மருந்து ஒன்றை பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Ahmed-Shahzad

- Advertisement -

சமீபத்தில் 26 வயதாகும் பாகிஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேன் அஹ்மத் ஷேஷாத் மீது போதை பொருள் பயன்படுத்தியதற்காக விரைவில் விசாரணை தொடங்க உள்ளதாம். இதற்காக அவருக்கு இரண்டாவது முறையாக போதை பொருள் பயன்படுத்தியதை அறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தான் செய்தி நாளிதழில் வந்த தகவலின்படி அஹ்மத் ஷேஷாத் இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக இவருக்கு இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை ஒன்றை வைக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ahmed

ஒருவேளை அவர் போதை பொருளை பயன்படுத்தியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது கிரிக்கெட் வாழ்விற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் அளவிற்கு இவருக்கு தண்டனை அளிக்கப்படும்.இதுவரை அஹ்மத் ஷேஷாத் பாகிஸ்தான் அணிக்காக 13டெஸ்ட் , 81 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement