ஐபிஎல் தொடர் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும். இதுதான் பைனல் ரிசல்ட் – மத்திய அமைச்சர் பேட்டி

Ipl cup
- Advertisement -

ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது இந்த வருடம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுமா என்பது குறித்து ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

IPL

- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பெரும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வருகின்றது. மக்கள் ஒன்றாக கூறினால் இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதால் பல லட்சக்கணக்கில் மக்கள் கூடும் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் தொற்று அதிகரித்துக் கொண்டே போவதால் இந்த வருடத்திற்கான ஐபிஎல் நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கு இரண்டு மூன்று திட்டங்களை வைத்துள்ளார். ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடக்கவில்லை என்றால் ஜூன் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடத்தலாம் எனவும் திட்டம் தீட்டி வருகிறார் கங்குலி.

corona 1

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் நடைபெறுவது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடர் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் ஏப்ரல்-15க்குப் பிறகு என்ன நடக்கிறது என்று.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொது மக்கள் பாதுகாப்பையும் பற்றியது.இதன் காரணமாக அரசு இதில் தலையிடும் என்று நினைக்கிறோம்.

CskvsMi

ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து அதற்கு ஏற்ப ஐபிஎல் தொடர் நடத்த அனுமதி கொடுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.

Advertisement