கம்பீருக்கும், தோனிக்கும் கேப்டன்சியில் இது ஒன்று மட்டுமே வித்தியாசம் – விவரம் இதோ

- Advertisement -

இந்திய அணிக்கு கிட்டத்தட்ட 13 வருடங்கள் கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கு முன்னால் இருந்த கேப்டன்கள் சாதிக்காததை எல்லாம் ஒற்றை ஆளாக கேப்டனாக இருந்த சாதித்தவர் தோனி. உலக கோப்பை, டி20 உலக கோப்பை தொடர், சாம்பியன்ஸ் கோப்பை ,டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் என அனைத்தையும் சாதித்தவர் தோனி.

Dhoni

இவரது அணியில் கௌதம் கம்பீர் முக்கிய பங்கு வகித்தார். 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் முக்கிய பங்காற்றியவர் இவர்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் தோனி சென்னை அணிக்கு கேப்டனாக இருப்பது போல கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு 6 வருடங்கள் கேப்டனாக இருந்தார். தோனி மூன்று முறை கோப்பையை வென்றது போல கௌதம் கம்பீரும் 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக இருந்து கோப்பையை வென்ற கொடுத்துள்ளார்.

Gambhir

இந்நிலையில் தோனி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியவை கேப்டன்சி ஸ்டைல் குறித்து பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் மேலாளர் ஜாய் பட்டாச்சாரியா. இதுகுறித்து அவர் கூறுகையில்…
தோனி எப்போதும் மிஸ்டர் கூல். கூல் ஆக இருப்பார். ஆனால் கௌதம் கம்பீருக்கு அது முற்றிலும் கிடையாது. களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவே கம்பீர் செயல்படுவார். இருவரும் கேப்டன்சி பாணியில் எதிரெதிர் பதமாக உள்ளனர்.

Gambhir 1

ஆனால் அந்தந்த கேப்டனின் அணுகுமுறையை புரிந்துகொண்டு அணி நிர்வாகம் நடந்து கொண்டால் ஒரு அணி வெற்றிகரமாக திகழ முடியும். தோனிக்கு நேர்மாறாக ஆடுகளத்தில் எப்போதும் ஆக்ரோசமாக தான் இருப்பார் என்றாலும் அவரின் வேட்கை எப்போதும் வெற்றிக்காகவே இருக்கும். ஆனால் தோனி எந்த அலட்டலும் இல்லாமல் வெற்றி கொள்பவர் என்று தெரிவித்துள்ளார் பட்டாச்சாரியா.

Advertisement