- Advertisement -

இந்தியா டூ அமெரிக்கா.. பாகிஸ்தான் அணியை ஒற்றை ஆளாய் வீழ்த்திய இந்த இந்திய வம்சாவளி வீரர் – யார் தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள டெல்லாஸ் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் அமெரிக்க அணியை எளிதாக வீழ்த்தும் என்றே பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் இந்த போட்டியில் நடந்ததே வேறு. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் இறுதி நேரத்தில் ஓரளவு சுதாரித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா அணி விளையாடியது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த இலக்கை அவர்களால் தொட முடியாது என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா அணியும் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சரியாக 159 ரன்களை குவித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அப்போது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணியானது மிகச் சிறப்பாக செயல்பட்டு 18 ரன்களை குவித்தது.

பின்னர் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போது தான் அமெரிக்க தரப்பில் இந்திய வம்சாவளி வீரரான சவுரப் நேத்ரவால்கர் பந்துவீச வந்தார். அந்த சூப்பர் ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணிக்கு மாபெரும் சாதனை வெற்றியை தேடித்தந்துள்ளார். ஏற்கனவே இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய அவர் சூப்பர் ஓவரையும் அசத்தலாக வீசியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த இந்த வம்சாவளி வீரர் யார்? என்பது குறித்த தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் அவரை பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம். அதன்படி மும்பையை சேர்ந்த சவுரப் நேத்ரவால்கர் இளம் வயதில் 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்காக உலககோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். இன்று இந்திய அணியில் இருக்கும் பல்வேறு பிரபல வீரர்களுடன் இணைந்து விளையாடி இருந்தாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இதையும் படிங்க : அமெரிக்கா பின்னங்கால் வைக்க வெச்சுட்டாங்க.. பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் 3 காரணம்.. பாபர் வருத்தம்

பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். அங்கு சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து கொண்டே கிரிக்கெட் விளையாடி அமெரிக்க அணியிலும் இடம் பிடித்து அசத்தலான ஆட்டத்தை செயல்படுத்தி இன்று அமெரிக்கா தேசிய அணிக்காக விளையாடி பாகிஸ்தான அணியை வீழ்த்தியுள்ளார். அதோடு 32 வயதான இவர் அமெரிக்க அணிக்காக இதுவரை 48 ஒருநாள் போட்டிகள் மற்றும் 29 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -