- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியை பத்தி தெரியும்? ஆனா அவரோட அண்ணன பத்தி தெரியுமா? – யார் இந்த நரேந்திர சிங் தோனி – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவரது குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்கள் குறித்து யாரும் அறியாத சில விஷயங்கள் இன்னமும் இருந்து வருகின்றன. அந்த வகையில் தல தோனி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் எம்.எஸ் தோனிக்கு ஒரு அண்ணனும் இருக்கிறார். அவருடன் தோனிக்கு இருக்கும் பழக்க வழக்கம் குறித்தும், அவருடன் இருக்கும் உறவு குறித்தும் தோனியின் பயோபிக் படத்தில் கூட காண்பிக்க பட்டிருக்காது.

அப்படி இருக்கையில் தோனியுடன் பிறந்த அண்ணன் யார்? அவருடன் இவரது உறவு முறிய என்ன காரணம்? என்பதை குறித்த சில சுவாரசியமான தகவல்களை தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம். அதன்படி 1981 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்த தோனி அவரது வீட்டின் கடை குட்டியாக இருந்து இன்று இந்தியா முழுவதும் புகழுள்ள ஒரு நபராக பார்க்கப்பட்டு வருகிறார். ஆனால் அவருடன் உடன் பிறந்தவர்களாக ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் இருக்கின்றனர்.

- Advertisement -

அதில் அக்காவை தோனியின் பயோ பிக் படத்தில் கூட நாம் பார்த்திருக்கலாம். ஆனால் அவரது அண்ணனை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. இந்நிலையில் அவர் குறித்த பதிவைத்தான் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி தோனியின் உடன் பிறந்த அண்ணன் நரேந்திர சிங் தோனி என்பவர்தான். தற்போது தோனி தனது பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தாலும் அவரது அண்ணன் இன்னமும் ராஞ்சி நகரில் உள்ள அவர்களது பூர்வீக கிராமத்தில் தான் வசித்து வருகிறாராம்.

எப்பொழுதுமே சாதாரணமாக இருக்க விரும்பும் அவர் அடிக்கடி தனது பெற்றோர்களை சந்தித்தாலும் பெரும்பாலும் தனது கிராமத்திலேயே தங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தோனிக்கும் அவருக்கும் உண்டான உறவு எப்படி அவர் ஏன் தோனியிடம் பேசுவதில்லை என்கிற தேடலில் கிடைத்த பதிலில் : தனிப்பட்ட வாழ்க்கையில் தோனிக்கும் அவரது அண்ணன் நரேந்திர சிங் தோனிக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவும், சில தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் தோனி தனது அண்ணனிடம் பேசுவதை கடந்த பல ஆண்டுகளாகவே தவிர்த்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று தோனியின் திரைப்படத்தில் உங்களது கதாபாத்திரம் ஏன் வரவில்லை என்று அவரது அண்ணனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது : தோனி சிறுவயதில் இருந்தே மிகவும் கடினப்பட்டு இந்த இடத்தை எட்டியுள்ளார். அவரது அந்த பயோபிக் ஃபிலிம் அவர் எப்படி உயர்ந்தார்? அவர் வாழ்வில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார்? என்பது குறித்து மட்டும் தான்.

அது அவருடைய குடும்ப படம் அல்ல. அதேபோன்று நான் தோனியை விட பத்து வயது மூத்தவன். அதனால் அவருடைய சிறு வயது காலத்தில் நான் வீட்டிலிருந்து வெளியே இருந்தேன். அதனால் எனக்கும் அவருக்குமான பிணைப்பு பெரிய அளவில் கிடையாது. அந்த வகையில் தான் நான் அந்தப் படத்தில் காண்பிக்கப்படாமல் போயி இருக்கலாம்.

மேலும் தோனி சற்று இளம் வயதை எட்டியபோதெல்லாம் பெரும்பாலும் கிரிக்கெட்-காகவே நேரத்தை செலுத்தியதால் என்னுடன் பெரிய அளவில் பிணைப்பில் இல்லை என்றும் நரேந்திர சிங் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by