எங்களுக்குள் காதல் வந்தது இப்படித்தான். இந்திய ஆஸ்திரேலிய போட்டியில் வைரலான ஜோடி – விவரம் இதோ

Love
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஆஸ்திரேலிய தோழியிடம் மைதானத்தில் காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அந்தப் பெண்ணும் ஓகே சொல்ல மைதானமே அந்தக் காதல் ஜோடிக்கு ஆரவாரம் செய்தது. மேலும் காதலை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் கட்டி அணைத்து இருவரும் முத்தமிட்டுக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல்லும் அந்த ஜோடிக்கு கைதட்டி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

Maxwell

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக தற்போது அந்த ஜோடியின் விவரங்கள் மற்றும் காதல்கதை ஆகியவை வெளியாகியுள்ளது. அதன்படி அந்த இந்திய இளைஞரின் பெயர் தீபன் அவரின் காதலி பெயர் ரோசிலி விம்புஷ் என்ற ரோஸ். சிட்னியில் தங்கியிருந்த தீபன் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மெல்போர்ன் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இருந்த ஒரு அப்பார்ட்மெண்டில் அவருக்கு முன்பு அதே வீட்டில் வசித்தவர் தான் ரோஸ்.

- Advertisement -

அப்போது ரோஸின் பெயருக்கு தீபன் தங்கியிருந்த வீட்டிற்கு ஒரு தபால் ஒன்று வந்துள்ளது. அந்த தபாலை ஒப்படைக்க முயன்ற தீபன் ஃபேஸ்புக்கில் அந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகள் விவரத்தை எடுத்து அதிலிருந்து ரோசை தொடர்பு கொண்டு அந்த தபாலை நேரில் சென்று கொடுத்துள்ளார். அப்படித் தபாலை முதல் முறை அவரை சந்தித்து கொடுக்கும் போது தான் பேச பயந்து தாகும் வெறும் 10 நொடிகள் அந்த சந்திப்பு இருந்ததாகவும் தீபன் கூறியுள்ளார்.

love 1

மேலும் அந்தத் தபாலை கொடுத்து விட்டு இருவரும் குட்பை சொல்லி கிளம்பிய பிறகு நாங்கள் நெருக்கமானோம். அதன் பிறகு எங்களுக்குள் இருந்த நட்பு அதிகமானது. இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின்போது மைதானத்தில் வைத்து எனது காதலை சொல்ல நான் நினைத்தேன். மேலும் அதுவே சிறந்த தருணம் அதைவிட சிறந்த சந்தர்ப்பம் இருக்காது என எண்ணி மைதானத்திலேயே காதலை நான் வெளிப்படுத்தினேன்.

இன்று அவள் என் பக்கத்திலேயே இருப்பதால் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இப்பொழுதும் எப்பொழுதும் இன்னும் நாங்கள் நீண்ட இன்னிங்ஸ் செல்லவேண்டியிருக்கிறது. நாங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளோம் என்பது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து அன்புக்கும், ஆதரவுக்கும் உங்களுக்கு உண்மையிலேயே நன்றியை சொல்ல விரும்புகிறேன் என இந்திய இளைஞர் தீபன் நெகிழ்ந்துள்ளார்.

Advertisement