- Advertisement -
உலக கிரிக்கெட்

முற்றும் விராட் கோலியின் “Fake Fielding” விவகாரம். ஐ.சி.சி கூறும் ரூல்ஸ் என்ன? – அம்பயரின் தவறா?

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 5 விக்கெட் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பலப்படுத்தியது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது முதல் 7 ஓவர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அப்போது மழை காரணமாக போட்டியில் நிறுத்தப்பட்டதால் மீண்டும் சில நிமிடங்களுக்கு பின்னர் ஆரம்பித்த அந்த போட்டி 16 ஓவராக குறைக்கப்பட்டு இலக்கு 151 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது. அதையும் சிறப்பாக துரத்திய பங்களாதேஷ் அணியானது 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி தழுவியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி “ஃபேக் பீல்டிங் செய்துவிட்டார்” என்றும் அதனால் எங்களுக்கு அந்த ஐந்து ரன்கள் பெனால்டியாக எங்களுக்கு கிடைத்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என வங்கதேச விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அவரது இந்த குற்றச்சாட்டு தற்போது சமூகவலைதளத்தில் காட்டுத் தீயாய் பரவியுள்ளது.

மேலும் விராட் கோலி செய்தது சரியா? தவறா? என்ற பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் கோலி விவகாரத்தில் எழுப்பப்பட்டுள்ள இந்த “ஃபேக் பீல்டிங்” குற்றச்சாட்டுக்கான ஐசிசி கூறும் விதிமுறை என்ன என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரபூர்வ ஐசிசி விதி 41.5.1 என்கிற விதிப்படி :

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது அல்லது அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது, ஃபில்டர்கள் பேச்சு அல்லது சைகை மூலம் பேட்ஸ்மேனை திசை திருப்புவது போன்றவை தவறாகும். அதற்கு தண்டனையாக பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை வரலாற்றில் இணைந்த கைகளாக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த 6 சாதனை ஜோடிகள்

கோலி விவகாரத்தில் திசை திருப்புதல் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து நடுவர் மட்டுமே தீர்மானித்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்று ஐசிசி கூறுகிறது. ஆனால் இந்தியா பங்களாதேஷ் போட்டியின் போது நடுவர்கள் அதனை கவனிக்காததால் களத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐசிசி சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -
Published by