இந்திய கிரிக்கெட் அணியில் மளிகை கடைக்காரர் மகள் – யார் தெரியுமா ?

- Advertisement -

மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை மளிகை கடை வைத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருபவராம்.இன்றுவரையிலும் ஒரு சிறிய வீட்டில் அனைவரும் ஒன்றாக கூட்டுக்குடும்பத்தில் தான் வசித்து வருகின்றார்களாம்.

radha1

- Advertisement -

இவ்வளவு ஏழ்மையான குடும்ப சூழலிலும் விடாமுயற்சியுடன் கூடிய கடினமான பயிற்சியால் இன்று இந்திய அணியில் முழுக்க முழுக்க தனது திறமையின் காரணமாக இடம்பிடித்து சாதித்துள்ளார்.தான் இந்திய அணியில் இடம்பிடித்த சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட ராதா “சிறுவயது முதலே கூட்டுக்குடும்பத்தில் சின்ன வீட்டில் வசித்து வந்தோம், பள்ளிமுடித்து வந்ததும் அப்பாவிற்கு உதவுவதற்காக அப்பாவின் மளிகை கடைக்கு சென்றுவிடுவேன்.

மற்றவர்களை போல சிறுவயது முதலே எல்லாம் எனக்கு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமென்ற ஆசையோ, கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற எண்ணமோ ஏற்படவில்லை.2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டை பார்த்தேன். அதன்பின்னர் தான் நாமும் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற ஆசையே வந்தது.

RadhaYadav

அதன்பின்னர் வீட்டருகில் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். ஒரு ஆட்டத்தில் நான் பந்துவீசி எதிரணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டேன். அதைபார்த்த பிரபுல் நாயக் என்கிற கிரிக்கெட் கோச் தான் எனது திறமையை கண்டு என் வீட்டில் பேசி எனக்கு முறையான கிரிக்கெட் விளையாட கற்றுத்தந்தார்.வறுமையால் ஒருகட்டத்தில் கிரிக்கெட் உபகரணங்கள் கூட வாங்க வழியின்றி நின்றபோது என்னுடைய கோச் தான் எனக்கு எல்லாம் வாங்கித்தந்து நான் சிறப்பாக விளையாட காரணமாக இருந்தார்.

அவரது பயிற்சியால் தான் நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன்.தற்போது நான் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார். நான் அணியில் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து என் கண்களில் நீர் கசிந்துவிட்டது என்றார்.இதுவரை இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராதா முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர்.

Advertisement