2647 கோடி மோசடி. தோனிக்கும் அம்ரபாலிக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன ? – விவரம் இதோ

Amrapali
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் நிராகரிக்கப்பட்டு வருவது ஒரு பிரச்சனையாக பார்க்கும் இந்நேரத்தில் தற்போது கிரிக்கெட்டை தாண்டி கார்ப்பரேட் பிரச்சனைகளும் தோனியை துரத்துகிறது. அப்படி தோனிக்கும் இந்த அம்ரபாலி மோசடி குழுவிற்கும் என்ன பிரச்சனை என்பதை இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

கடந்த 2003ம் ஆண்டு அம்ரபாலி குழுமம் அணில் குமார் என்பவரது தலைமையில் துவங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் நிதானமான வளர்ச்சியை பெற்ற இந்த குழுமம் 2010 ஆம் ஆண்டுவாக்கில் வட இந்தியாவில் ஒரு நம்பகரமான பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியாக உருமாறியது. இதற்கு அனில்குமார் ஒரு முக்கிய காரணம் என்றால் இந்த குழுமத்தின் விளம்பர தூதராக இருந்த தோனியும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஏனெனில் தோனியை விளம்பர தூதராக வைத்து அவரை காட்டியே பல வீடுகளை அவர்கள் விற்றுள்ளார்கள். மேலும் ஒரு பக்கம் இந்த ரியல் எஸ்டேட் வளர்ந்து கொண்டிருக்க மறுபக்கம் அந்த குழுமம் ரியல் எஸ்டேட் தாண்டி கல்வி, பொழுதுபோக்கு, எஃப்எம், சிஜி மற்றும் ஹோட்டல் என சகல வியாபாரத்திலும் சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்டது. இந்நிலையில் அம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனம் தோனியை வைத்து வியாபாரம் செய்து மக்களிடம் இருந்து பணத்தை பெற்றிருக்கிறார்கள்.

Dhoni

சொந்த வீடு வாங்குவதற்காக மக்களும் தங்களது பணத்தை அந்த நிறுவனத்தை நம்பி கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். தோனியின் விளம்பரத்தை வைத்து பலரிடம் பணத்தை கோடிக்கணக்கில் அம்ரபாலி நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் வீடுகளை சொன்ன நேரத்தில் காட்டிக் கொடுக்கவில்லை மேலும் அவர்களுக்கான வீடே அங்கு இல்லை என்றும் தெரியவந்தது. அப்படி மக்கள் கொடுத்த பணத்தை அம்ரபாலி குழுமம் தங்களது மற்ற தொழில்துறைகளுக்கு முதலீடாக சுருட்டிக்கொண்டது பின்னர் தெரியவந்தது.

- Advertisement -

amrapali 1

இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த வழக்குதான் அம்ரபாலி மோசடி வழக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு வீடு கிடைக்காமல் ஏமாந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறும் அப்படி இல்லை என்றால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறும் வழக்குகளை பதிந்தனர். நொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 42,000 பேர் கொடுத்த பணத்தை மொத்தமாக 2647 கோடி ரூபாய் பணத்தை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளது.

amrapali 2

இதனால் அந்நிறுவனத்தின் மோசடி வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதன்மை இயக்குனர் மற்றும் சில இயக்குனர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி ரூபேஷ்குமார் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மட்டுமின்றி தோனியும் இதில் விளம்பர தூதராக சம்பந்தப்பட்டவர் எனவே அவரையும் இந்த மோசடி வழக்கில் முக்கிய நபராக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

amrapali 3

மேலும் தோனியை பயன்படுத்தி தான் இந்த பணத்தை அவர்கள் பறித்து விட்டார்கள் இந்த குற்றத்திற்கு தோனியும் ஒரு உடந்தைதான் என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு அந்த குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தோனி ஒரு விளம்பர தூதராக வந்தது தப்பா ? அல்லது அன்றாட வாழ்க்கையில் சிறிது சிறிதாக சேர்த்து ஒரு சொந்த வீட்டில் குடியேறி விடமாட்டோம் என்று கனவு காணும் ஒரு நடுத்தர மக்கள் செய்தது தப்பா ? யாருக்கு நீதி கிடைக்கும் என்பது நீதிமன்றத்தின் முடிவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement