- Advertisement -
ஐ.பி.எல்

நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி.. பிளேஆப் சுற்றுக்கு சி.எஸ்.கே செல்ல என்ன வழி? – விவரம் இதோ

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவ்வேளையில் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக இருப்பதால் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சி.எஸ்.கே அணி பிளேஆப் சுற்றுக்கு செல்ல என்ன வாய்ப்பு? :

அதே வேளையில் எதிர்பார்த்த சில அணிகள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதும், சுமாரான அணியாக பார்க்கப்பட்ட சில அணிகள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் என இந்த தொடரானது வெகுசிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. அதாவது இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் முறையே 8 மற்றும் 9 ஆகிய இடங்களில் உள்ளன.

அதிலும் குறிப்பாக சென்னை அணி மும்பை அணியை விட ரன்ரேட் அடிப்படையில் பின்தங்கி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே நான்கு போட்டியில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கு முன்னேற வேண்டுமெனில் எந்த அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது வரை முடிந்துள்ள நான்கு போட்டிகளுக்குப் பிறகு இன்னும் சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த 10 போட்டிகளில் குறைந்தது 7 வெற்றிகளை பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். எனவே இனிவரும் 10 போட்டிகளில் 3-ல் மட்டும் தான் சென்னை அணி தோல்வியை சந்திக்க வேண்டும். ஒருவேளை அதைவிட அதிகமான தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நிச்சயம் ப்ளே ஆப் வாய்ப்பு பறிபோகும்.

இதையும் படிங்க : எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் இது நடந்தா சந்தோஷம் தான் – எம்.எஸ் தோனி ஓபன்டாக்

சென்னை அணி அடுத்ததாக பஞ்சாப், கொல்கத்தா, லக்னோ என மூன்று வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கும் வேளையில் அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் சற்று சாதகமான நிலைக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -