மெல்போன் நகரில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்துள்ளது. மேலும் நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 333 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை தொடர் இருக்கும் ஆஸ்திரேலியா அணியானது வெகு விரைவாகவே ஆட்டமிழந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெல்போர்ன் போட்டியில் வெற்றி கிடைக்குமா? :
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கிட்டத்தட்ட 350 ரன்கள் வரை சேசிங் செய்து வரலாற்று வெற்றியினை பெறுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அது குறித்த தகவலை இங்கு காணலாம். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 105 ரன்கள் முன்னிலை பெற்று ஆஸ்திரேலியா அணியானது தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்து 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தில் எஞ்சியுள்ள ஒரு விக்கெட்டை ஆஸ்திரேலிய 350 ரன்கள் முன்னிலைக்கு முன்னர் இழக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த இலக்கை சேசிங் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது 300-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்ட இலக்கினை போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி சேசிங் செய்து வரலாற்று வெற்றியினை பதிவு செய்திருந்தது. அந்த வகையில் இந்த நான்காவது மெல்போர்ன் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் நாளைய போட்டியில் எஞ்சியுள்ள ஒரு விக்கெட்டினை இந்திய அணி குறைந்தது 5 ஓவர்களுக்குள் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு முழுவதுமாக 85 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி கிடைக்கும் பட்சத்தில் இந்திய அணி தற்போது இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 8 பேட்ஸ்மேன்கள் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் அந்த இலக்கினை நோக்கி அதிரடியாக சேசிங் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இணைந்து முதல் 100 ரன்களை அதிரடியாக குவித்து விட்டால் சேசிங் செய்வது எளிதாகிவிடும்.
இதையும் படிங்க : 1 போட்டி எஞ்சியிருக்கும் போதே கபில் தேவின் 33 வருட ரெக்கார்டை காலி செய்த பும்ரா – வரலாற்று சாதனை
ஒருவேளை இந்திய அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தால் மிடில் ஆர்டரில் நிச்சயம் கே.எல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா போன்ற வீரர்கள் இருப்பதினால் மிடில் ஆர்டரில் இந்திய அணியால் போட்டியை நிதானப்படுத்த முடியும். அதனால் தோல்வியை நோக்கி செல்லாமல் டிராவில் முடிக்கவும் முடியும். ஆனால் எப்பொழுதுமே இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கியே செல்வதால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.