முகமது சமி மீது பலபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

shami

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சமி. இவரது மனைவி ஹசின் ஜஹான். இருவருக்கும் திருமணமாகி ஒரு கைக்குழந்தையும் உள்ளது.

shami

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளதாக அவரது மனைவி ஹசின் ஜகான் நேற்று பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து மேலும் தனது கணவர் முகமது சமி சமூகவலைத்தளங்களில் பல பெண்களுடன் அந்தரங்கமாகவும் சில பெண்களுடன் ஆபாசமாகவும் பேசிய ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டிருந்தார். மேலும் தனது கணவர் பேசிய சில பெண்களின் மொபைல் எண்ணையும் இணைத்திருந்தார்.

sami3

 

- Advertisement -

பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். தற்போது
அந்த புகாரின் மீது போலீசார் விசாரித்து தற்போது முகமது சமி மீது 498A/323/307/376/506/328/34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

shami5

Advertisement