10 வருடங்களுக்கும் மேல் விளையாடியும் ஒரு “நோபால்” கூட வீசாத 5 பவுலர்கள் – அசத்தல் விவரம் இதோ

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து வீச்சாளர் நீண்டகாலம் ஆடுகிறார் என்றால் சில தவறு செய்வது வழக்கம் தான். அதிலும் ஒருசில பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோபால் வீசுவார்கள். அப்படி இருந்தும் இதுவரை சில குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள் கிரிக்கெட் போட்டிகளில் நோபால் வீசாமலும் இருந்துள்ளார்கள். அவர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

Botham

- Advertisement -

இயான் போத்தம் :

இவர் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஆவார். 1970 மற்றும் 80களில் விளையாடியவர் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 பந்துகள் வீசியிருக்கிறார். ஆனால் ஒரு நாள் கூட இவர் நோபால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

imran

இம்ரான்கான் :

- Advertisement -

தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இவர். உலக கோப்பை வென்ற கேப்டன் இவர். இவர் சர்வதேச போட்டிகளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பந்துகளை வீசியுள்ளார். ஆனால் இவரும் ஒரு நோபால் கூட வீசியதில்லை 362 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Lillee

டென்னிஸ் லில்லி :

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். 1980 காலகட்டத்தில் அடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் 21,000 பந்துகளை வீசி 309 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆனால். ஒரு நோபால் கூட வீசியதில்லை .

பாப் வில்ஸ் :

- Advertisement -

1970 களில் இங்கிலாந்துக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் 20,000 பந்துகளை சர்வதேச அளவில் வீசியுள்ளார். ஆனால் இவரும் நோபால் வீசியதில்லை .

Swann

கிரேம் ஸ்வான் :

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் விளையாடிய இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் இவர். 13 வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 26 ஆயிரம் பந்துகளை வீசியுள்ளார் இருப்பினும் ஒரு நோபால் கூட இவர் வீசியதில்லை.

Advertisement