இந்திய அணி தங்கியிருக்கும் “Hilton” ஹோட்டலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா ? – அசரவைக்கும் தகவல் இதோ

IND

இந்திய அணி தற்போது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரே 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட (நேற்று முன்தினம்) ஜூன் மாதம் 2ஆம் தேதி தனி விமானத்தில் கிளம்பி 3 ஆம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. முன்னதாக மும்பையில் உள்ள ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் அனைவரும் முறையான பரிசோதனைக்கு பிறகு தற்போது இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர். லண்டன் சென்ற இந்திய அணி அங்கிருந்து 130 கிலோ மீட்டர் பேருந்து பயணம் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள “ஏஜஸ் பவுல்” கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றடைந்தனர்.

southampton

அங்கு 5 நாட்கள் வரை குவாரன்டைனில் இருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு நான்காம் நாளில் இருந்து இந்திய வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய வீரர்கள் “ஏஜஸ் பவுல்” மைதானத்தில் உள்ள “ஹில்டன்” ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்பத்துடன் தங்கியிருக்கும் இந்திய வீரர்கள் அங்கிருந்து மைதானத்தை பார்த்தபடி இருக்கும் பல புகைப்படங்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அந்த மைதானத்தில் உள்ள இந்த ஹோட்டல் அறையின் சிறப்பம்சங்களை இணையத்தில் தேடி வருகின்றனர். அதன்படி நாங்கள் அந்த மைதானத்தில் உள்ள “ஹில்டன்” ஹோட்டலில் உள்ள வசதிகளை இந்த தொகுப்பில் உங்களுக்காக வழங்கி இருக்கிறோம். இதோ அது குறித்த தகவல் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கும் இந்த “ஏஜஸ் பவுல்” மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டலான “ஹில்டன்” ஹோட்டல் உள்ளது.

hilton

இது சாதாரணமான வசதியுடன் உள்ள ஒரு ஹோட்டல் கிடையாது. அதிநவீன வசதிகளுடன் முற்றிலும் ஏசி மயமாக்கப்பட்ட இந்த ஹோட்டலில் பால்கனியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே போட்டியை பார்க்கும் அளவிற்கு இந்த அறைகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று தளங்களில் 171 அறைகள் கொண்ட இந்த மிகப்பெரிய ஹோட்டல் ஆனது சிறப்பான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சுவாரசியம் என்னவெனில் இந்த ஹோட்டலில் இருக்கும் 171 அறைகளிலும் இருந்தும் நீங்கள் நேரடியாக போட்டிகளைக் கண்டு ரசிக்க முடியும். அது மட்டுமின்றி ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி பால்கனி வசதிகளும் அந்த பால்கனியில் இருந்து அமர்ந்தபடி உங்களால் போட்டியை ரசிக்க முடியும்.

- Advertisement -

hilton 1

போட்டி நடக்கும் காலங்களில் இந்த ஹோட்டலில் உள்ள 20 அறைகள் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு விடப்படுகின்றன. ஏனெனில் இந்த அறைகளில் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்க ஏராளமானோர் முன்பதிவு செய்கின்றனர். இதன்காரணமாக இந்த ஹோட்டலில் எப்பொழுதும் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசிக்க ஆவலாக இருப்பார்கள் எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாதாரண ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து போட்டியை ரசிக்க செல்வந்தர்கள் இந்த ஹோட்டலில் ரூம் புக் பண்ண போட்டா போட்டி போடுவார்கள் என்றும் நிர்வாகம் தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement