வங்கதேசம் வீரர் மகமதுல்லாவை கிண்டல் செய்த ரசிகர்கள்..கோபத்தில் மகமதுல்லா செய்த செயல்.

- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.இந்த தொடரில் லீக்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியஅணி முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

bangladeshs

- Advertisement -

கடந்த 16ம் தேதி கடைசிலீக்கில் இலங்கையுடன் மோதிய வங்கதேச அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

முன்னதாக வங்கதேச அணி பேட்டிங் செய்த போது வங்கதேச அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான மொமதுல்லா, ஷபீர் ரஹ்மான் மிஸ் செய்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்தபோது பந்துவீசிய விஜய்சங்கரால் ரன்அவுட் செய்யப்பட்டார்.வங்கதேச அணி சரிவிலிருந்து மீண்டு வந்த நேரம் அது. மொமதுல்லாவும்,ஷபீர் ரஹ்மானும் இணைந்து 25பந்துகளில் 36ரன்களை சேர்த்த போது தான் இந்த ரன்அவுட் நிகழ்ந்தது.இதனால் கோபமடைந்த மொமதுல்லா ஆட்டமிழந்து ஓய்வறையை நோக்கி செல்லும்போது படிக்கட்டுகளை எட்டி உதைத்தபடியே சென்றார்.

Advertisement