கடைசியாக விளையாடிய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று தூக்கி எறியப்பட்ட 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Mishra
- Advertisement -

ஒரு சில வீரர்கள் திறமை இருந்தும் இந்திய அணிக்காக ஆட முடியாமல் கடைசிவரை இருந்துள்ளனர். அதிலும் ஒரு சில வீரர்கள் இந்திய அணிக்காக ஆடி விட்டு கடைசியாக ஆட்ட நாயகன் விருது பெற்று விட்டு அதன் பின்னர் இந்திய அணிக்காக ஆட முடியாமல் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்

Badrinath

- Advertisement -

சுப்ரமணியம் பத்ரிநாத் :

இவர் தமிழக வீரர் ஆவார். 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடினார். அப்போது 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருது பெற்று இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..

இர்பான் பதான் :

- Advertisement -

இவருக்கு தற்போது 35 வயதாகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய போது இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளும் 29 ரன்களும் எடுத்து இருந்தார். அப்போது ஆட்டநாயகன் விருது இவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக இவர் ஆடவே இல்லை.

அமித் மிஸ்ரா :

- Advertisement -

இவர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2008ஆம் ஆண்டு அறிமுகமானவர். 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார் . அப்போது 18 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை.

Ojha

பிரக்யான் ஓஜா :

இவர் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஆவார் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது அதன் பின்னர் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Advertisement