காயங்களுக்கு ஆறுதலாக கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம்..! – CSK வீரர் அதிரடி..!

- Advertisement -

கடந்த ஞாற்றுக்கிழமை (மே 27) மும்பையில் நடந்த ஹைட்ரபாத்திற்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெற்று. ஐபிஎல் தொடரின் 11 சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி. இந்த வெற்றி குறித்து பல்வேறு ரசிகர்களும் சென்னை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் இந்த வெற்றியை சென்னை அணி மக்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
chennai

நடந்து முடிந்த 11 வது ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் புதிய வீரராக சேர்க்கப்பட்டார் ஹர்பஜன் சிங். இந்த ஐ.பி.எல் தொடர் ஆரம்பத்தின் முதலே தான் தமிழை கற்றுவருவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அதற்கேற்றார் போல அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு சென்னை ரசிகர்களை கவர்ந்தார்.

- Advertisement -

கடந்த ஆண்டு வரை மும்பை அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங்க், இந்த ஆண்டு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்படார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்த தொடரில் சீராக விளையாடாததால் இவருக்கு இறுதி போட்டியில் வாய்ப்பளிக்கபடவில்லை. இறுதி போட்டியில் போட்டியில் விளையாடிய சென்னை அணி ஹைதராபாத் அணியுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்தில் சென்னை அணியின் இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஹர்பஜன் “பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த ஐ.பி.எல் கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது.உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு நன்றி” என்று தமிழில் பதிவிட்டுட்டு அசத்தியுள்ளார்.

Advertisement