தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு இந்திய அணி பலமாக வரும்.! ட்வீட் செய்த முன்னாள் அதிரடி வீரர்.!

team-india

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது தற்போது நடை பெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது இந்நிலையில் இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ருண்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியின் 6 ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்ட வில்லை அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்களை குவித்தார்.இந்நிலையில் இரண்டாவது 130 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்ததால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இதுகுறித்து டிவீட்டரில் கருத்து கூறியுள்ள சேவாக் இந்திய அணிக்கு ஆறுதல் அளிப்பதுபோல் கூறியுள்ளார். இது ஒரு மோசமான தோல்வி இந்திய அணி போராடமால் தோல்வியுற்றது மனதை காயமடைய செய்கிறது இதுபோன்ற கடினமான நிலையில் தான் நாம் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் அப்போது தான் அணி சரிவிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

viru

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடர்களில் பல வருடமாக இந்தியா தொடர் தோல்விகளையே சந்தித்து வரும் நிலையில் இந்த தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவித்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணி இந்நிலையில் இருந்து மீண்டு வருமா டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.