மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத துவக்கத்தில் தொடங்க உள்ளதால் அந்த தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது இந்த தொடரில் தோனி இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக பண்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் மீண்டும் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி : கோலி (கேப்டன்), ரஹானே, மாயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, விஹாரி, ரோஹித் சர்மா, பண்ட், சஹா, அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்
இந்த தொடருக்கான இந்திய அணியில் அதிரடி துவக்க வீரரான ரோஹித் சர்மா இந்திய அணியில் சற்று இடைவெளிக்கு பின் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.