பேட்டிங்கில் சொதப்பிய ரோஹித் சர்மா….பார்முக்கு திரும்ப இவர் தான் காரணம்…யார் தெரியுமா !

rohit sharma
- Advertisement -

கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு நேற்றைய பெங்களூரு அணிக்கெதிரான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கடந்த மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்படாத மும்பை அணியின் கேப்டன் நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கு பின்னால் கிரிக்கெட்டின் கடவுள் சச்சினும், அவரது மகன் அர்ஜீன் சச்சினும் தான் காரணம் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

sharma

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜீன் சச்சினுடன் சேர்ந்து கொடுத்த சிறப்பு பயிற்சியே பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ரோகித்சர்மா சிறப்பாக பேட்டிங் செய்ய பெரிதும் உதவியிருக்கின்றதாம்.நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 14வது லீக்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

சிறப்பாக விளையாடிய மும்பை அணி தனது நான்காவது லீக்கில் முதல் வெற்றியை பதிவுசெய்தது. நேற்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா 52 பந்தில் 94 ரன்களை குவித்து அசத்தினார்.பின்னர் பெங்களூர் அணியின் பேட்டிங்கின் போது கேப்டன் விராட்கோலியும் அதிரடியாக விளையாடி 92ரன்களை குவித்தார்.

Rohit

இலங்கை முத்தரப்பு தொடரின் முதலே அவுட் ஆப் பார்மில் இருந்த ரோகித்சர்மா ஐபிஎல் தொடரில் கடந்த மூன்றுபோட்டிளிலுமே கேவலமாக ஆடிவந்தார். இந்த ஐபிஎல் சீசனில் முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து ரோகித்சர்மா எடுத்த ரன்கள் வெறும் 44 ரன்கள் மட்டுமே. அந்த மூன்று போட்டிகளிலுமே மும்பை அணி கேவலமாக தோற்றது.நடப்பு சாம்பியனான மும்பை அணியா இப்படி கேவலமாக விளையாடுகின்றது என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் ரோகித்சர்மாவை கழுவி கழுவி ஊற்றத்தொடங்கினர்.

- Advertisement -

ரோகித்சர்மா தன்னுடைய அவுட்–ஆப்–பார்மிலிருந்து மீண்டுவர கிரிக்கெட் உலகின் கடவுளான சச்சினிடம் நேற்றைய போட்டிக்கு முன்னதாக சில ஆலோசனைகளை பெற்றார்.நேற்றுமட்டும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜீன் சச்சினுடன் சேர்ந்து ரோகித்சர்மாவிற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி அளித்துள்ளார்.

அந்த பயிற்சியின் போது சூழ்நிலைகளுக்கேற்ப எப்படி பேட்டிங் செய்வது, பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது போன்ற நுணுக்கங்களை சச்சின், ரோகித்சர்மாவிற்கு கற்றுத்தந்துள்ளார்.மேலும் பயிற்சியின்போது ரோகித் சர்மாவிற்கு தனது மகன் அர்ஜீன் சச்சினை பந்துவீச வைத்துள்ளார்.அர்ஜீன் சச்சினிற்கு மும்பை அணி பந்துவீச்சு கோச் மலிங்காவும் சில ஆலோகனைகளை வழங்கினார்.

சச்சினின் பயிற்சிக்கு நேற்றைய போட்டியில் கைமேல் பலன் கிடைத்தது எனலாம். கடந்த மூன்று போட்டிகளில் மகா மட்டமாக பேட்டிங் செய்த ரோகித்சர்மா நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 பந்துகளில் 94 ரன்களை குவித்து மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக விளங்கினார்.சச்சின் தனது மகனுடன் வந்து பயிற்சியின் போது வீரர்களுக்கு பயிற்சியளித்ததை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிந்து அர்ஜீன் சச்சினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement